தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழை: வானிலை ஆய்வு மையம்!
தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். பகலில் அடித்த வெப்பத்தின் காரணமாக, இரவில் வீசும் அனல்காற்றால், இரவு தூங்க முடியாத நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில், திருச்சி மாவட்டத்தில் புள்ளம்பாடியில் 50 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, அம்பாசமுத்திரத்தில் தலா 40 மி.மீ., ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை செங்கத்தில் தலா 30 மி.மீ., சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 10 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது என அவர் தெரிவித்தார்.
இதேபோல், வடதமிழகத்திலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் 6-ம் தேதி டெல்லியில் கரும் இருள் எங்கும் சூழ்ந்தவாரு இருந்த நிலையில், வேகமான காற்றுடன் புழுதிப்புயல் வீசியது இதனால் மக்கள் அவதிப்பட்டனர். மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, டெல்லியில் நேற்று காலை 5 மணியளவில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. டெல்லி மட்டுமின்றி அதன் சுற்றுப்புறத்திலும் லேசான மழை பெய்தது. அனல்காற்றால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.