இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் இன்று அவர் தங்கி இருந்த ஓட்டலில் விழுந்து கையை உடைத்துக் கொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் முன்னாள் மந்திரியான ஹிலாரி கிளிண்டன் 3 நாள் பயணமாக மத்தியப்பிரதேசத்திற்கு வந்தார். அவர் இந்தியா வரக்காரணம் கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வி அடைந்த காரணத்தையும், அதிபர் டிரம்ப் எப்படி வெற்றி பெற்றார் என்ற காரணத்தையும் புத்தகமாக எழுதி உள்ளார். அந்த புத்தக வெளியீட்டு விழாவிற்காக இந்தியா வந்துள்ளார். 


இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராஜஸ்தான் தலைநகர் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் பாலஸ் என்ற நட்சத்திர ஓட்டலில் ஹிலாரி கிளிண்டன் தங்கியுள்ளார். இன்று அதிகாலை அவர் திடீரென பாத்ரூமில் உள்ள பாத்டப்பில் ஹிலாரி வழுக்கி விழுந்ததாக தெரிகிறது. இதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாம். 


பின்னர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்து பார்த்ததில், கையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கள் அன்று மத்திய பிரதேசத்தில் உள்ள ஜஹாஸ் மஹாலுக்கு ஹிலாரி சென்றிருந்த போது, படிக்கட்டில் இரண்டு முறை சறுக்கி தடுமாறினார். அந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலானது. சில மாதங்களுக்கு முன்பு, லண்டன் சென்றிருந்த அவர், தடுக்கி விழுந்து கால் விரலை உடைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 


இப்படி தொடர்ந்து விழுந்து கொண்டே இருக்கிறாராம் ஹிலாரி.