Huawei நிறுவனத்தின் மலிவு விலை போனான Honor மொபெல் தனது அடுத்த வரவினை விரைவில் இந்தியாவில் வெளியிட காத்திருக்கிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Honor போன்களின் Honor 10 ஆனது வரும் மே 10-அம் நாள் இந்தியாவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல ஆன்லைன் விற்பனை தளமான Flipkart-ல் இந்த போன் வெளியாகும் என தெரிகிறது.


4GB RAM மற்றும் 64GB நினைவகத்துடன் வெளிவரும் இந்த Honor 10 ஆனது ரூ.27,000 ஆக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 


அதேப்போல் 6GB RAM மற்றும் 128GB நினைவகத்துடன் வெளிவரும் இந்த Honor 10 ஆனது ரூ.21,500 ஆக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது


Huawei P20 போன்றே ஒத்த அமைப்புடன் வெளிவர காத்திருக்கும் இந்து Honor 10 ஆனது கண்ணாடி உடல் அமைப்புடன் வருகிறது. 5.84-inch 1080p LCD screen மற்றும் HiSilicon Kirin 970 SoC வசதியுடன் வருகிறது.


Phantom Blue மற்றும் Mirage Purple என்னும் இரு வண்ணங்களில் வரும் இந்த போன் ஆனது பிங்கர் பிரின்ட் செக்கியூரிட்டி சிஸ்டத்தினை கொண்டுள்ளது.


Android 8.1 Oreo இயங்குதளத்தில் வெளியாகும் இந்த மொபைல் போன் ஆனது, 24 MP முன் கேமிராவையும், 16MP பின் கேமிராவையும் கொண்டுள்ளது. அத்துடன் 4G LTE, Wi-Fi, Bluetooth மற்றும் 3400mAh பேட்டரி கொள்ளலவுடன் வெளிவர காத்திருக்கிறது!