உத்திர பிரதேசத்தில், வரதட்சணை கொடுக்காததாலும், பெண் குழந்தை பெற்றெடுத்த காரணத்தாலும் தன் மனைவியின் மீது கசவரே அமிலத்தை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி ரயில்வே பாதுகாப்பு படை காவலராக இருப்பவர் கோமல், வரதட்சணைக் கேட்டு கொடுமைபடுத்தி வந்த தன் கணவர் கபில் குமாரினை விட்ட டெல்லியில் தன் தாயாருடன் வாழ்ந்து வருகின்றார்.


நேற்று, அவரது கணவர் கபில் குமார் டெல்லியில் உள்ள தன் மனைவியினை பார்க்க உத்திரபிரதேசத்தில் இருந்து வந்துள்ளார். வந்தவர் தன் மனைவியிடம் பேசிக்கொண்டு இருந்தபோது திடீரென அவர் மீது அமிலத்தினை எறிந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட கோமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கையில், கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கணவரிடம் வரதட்சணை கொடுமை அனுபவித்து வந்த கோமல், கடந்த 2016-ஆம் ஆண்டு பெண் குழந்தை பெற்றெடுத்ததால் பிரச்சணை பெரிதாக தனது கணவரை பிரிந்து தன் தாயாருடன் கோமல் வாழ்ந்து வந்தார்.


இந்நிலையில் நேற்று திடீரென கோமலை கொலைசெய்யும் முயற்சியில் கபில் ஈடுபட்டது அவர்களது குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


இதுதொடர்பாக கோமல் கொடுத்த புகாரின் பேரில் கபில் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரி SKS ப்ரதாப் தெரவித்துள்ளார்!