ஐதராபாத்: மெக்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 போரையும் விடுதலை செய்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐதராபாத்தில் சார்மினார் அருகே உள்ள புகழ்பெற்ற தளம் மெக்கா மசூதி. கடந்த 2007-ம் ஆண்டு இந்த மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்த போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 9 பேர் பலியாயினர். மேலும், சுமார் 58 பேர் படுகாயம் அடைந்தனர். 


இந்த குண்டுவெடிப்பின் போது வெடிக்காத 2 சக்திவாய்ந்த குண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து, மசூதிக்கு வெளியே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.


இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக அசீமானந்த், தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத்பாய், ரஜேந்தர் சவுத்ரி உட்பட 8 பேர் இவ்வழக்கில் தொடர்புள்ளவர்கள் என்று என்.ஐ.ஏ குற்றம் சாட்டியது. இவர்களில் 5 பேருக்கான தண்டனையை நீதிமன்றம் இன்று வழங்கியது. இதற்காக குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.


இதையடுத்து, உரிய ஆதாரங்கள் இல்லாததால் 5 பேரையும் விடுதலை செய்வதாக நீதிமன்றம் தற்போது அறிவித்தது.மேலும் இந்த வழக்கில் உள்ள மற்ற 3 குற்றவாளிகளில், சுனில் ஜோஷி விசாரணையின் போது படுகொலை செய்யப்பட்டார். சந்தீர் வி. டாங்கே, மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராம்சந்திர கல்சங்ரா இரண்டு பேரும் தப்பி வருகின்றனர். அவர்களை இன்னும் பிடிக்க முடியவில்லை..!