IPL-2018 கிரிக்கெட் போட்டிகளின் 11-வது சீசன் இந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி வரும் அடுத்த மாதம் மே 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காணுகின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் 7 லீக் ஆட்டங்களில் ஆடுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபிஎல் 2018: சென்னை விளையாடும் போட்டிக்கான நாள் மற்றும் டிக்கெட் விலை -முழு விவரம்


இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் எனக் கூறி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போராட்டத்தை திசை திருப்பக் கூடும். எனவே ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்த அனுமதிக்கக் கூடாது என பல அமைப்புகள் கூறிவருகின்றனர். 


அதன் ஒரு பகுதியாக இயக்குநர் பாரதிராஜா ஐபிஎல் தொடரை குறித்து அன்பு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். 


அதில் அவர் கூறியதாவது: 


என் இனிய தமிழ் மக்களே! என ஆரம்பித்து, "தமிழர்கள் வஞ்சிக்க போதெல்லாம் உறைந்த போய்க் கிடந்த நம் உணர்கவுகளை உசுப்பிவிட்டு, நம்மை புரட்கியாளர்களாய் மாற்ற எத்தனையோ அமைப்புகள் போராடிகொண்டிருக்கும் போது IPL என்னும் மாய உலகத்திற்கு நம்மை அடிமைப்படுத்தி, நம்முடைய தேசியப்புரட்சிக்கு தீ வைக்கும் முட்டாள் தனமான விளையாட்டை தவிர்ப்போம்."


IPL 2018: ஐ.பி.எல்-க்கு தடை கேட்டு வழக்கு!


IPL என்னும் கிரிக்கெட்டை நிராகரி. நிறைய வேண்டியது மைதானத்தின் இருக்கைகள் அல்ல.. புரட்சியின் மைதானம்.


IPL விளையாட்டை விளையாட வேண்டாம் என்று சொல்லவில்லை. கொஞ்சம் ஒத்திவையுங்கள் என்பதை தமிழ் இன உணர்வோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.


CSK நிகழ்ச்சி-ல் கண் கலங்கிய தோனி- வீடியோ உள்ளே!


இவ்வாறு  இயக்குநர் பாரதிராஜா தனது சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.