புதுடெல்லி: சவார்பாஸர் பகுதியில் உள்ள நயா பான்ஸ் பகுதியில் டெல்லி புகையிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் சுமார் 10 லட்சம் மதிப்பிலான சட்டவிரோத சிகரெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவம் குறித்து புகையிலை தடுப்பு பிரிவு கூடுதல் அதிகாரி தெரிவிக்கையில் SK அரோரா தெரிவிக்கையில், நேற்று இரவு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த தேடுதல் வேட்டையில் இந்த சட்டவிரோத சிகரேட்டுகள் பிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


பிடிப்பட்ட சிகரெட்டுகளில் பெரும்பாண்மை சிகரெட்டுகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என தடுப்புபிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வினியோகஸ்தர் சந்தை விலையின் அடிப்படையில் பிடிப்பட்ட பொருட்களின் மதிப்பானது சுமார் 8-லிருந்து 10 லட்சம் வரை மதிப்பிடப் படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவத்தில் பிடிப்பட்ட புகையிலை வினியோகஸ்தர்கள் மீது புகையிலை தடுப்பு பிரிவு Act (COTPA) 2003 -ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் அவர்களுக்கு துணை நின்ற சில்லரை விற்பனையாளர்களுக்கு ரூ.1000 அல்லது ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் எனவும், அல்லது இரண்டும் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


சட்டவிரோத புகையிலை தொடர்பாக பல ரெய்டுகள் நடத்தப்பட்ட போதிலும், அதிக அளவிலான சரக்குகள் கிடைத்தது இதுவே முதல் முறை என தடுப்பு பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்!