ஆப்கனில் ஓட்டுச்சாவடியில், தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பொது மக்கள் 50 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயம் படுகாயமடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிரியாவை போன்றே ஆப்கானிஸ்தான் போரால் சீரழிந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 16 வருடங்களாக தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அப்பாவி பொது மக்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.


அந்நாட்டு அரசு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தலீபான் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என முன்வந்தது. எனினும், தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.


இந்நிலையில், பார்லிமென்ட் தேர்தல் நடத்துவதற்கான பணிகளில், ஆப்கன் தேர்தல் கமிஷன் ஈடுபட்டு வருகிறது. 


இதற்காக, ஆப்கானிஸ்தானின் பல்வேறு இடங்களில் ஓட்டுச்சாவடிகள் புதிதாக திறக்கப்பட்டு, புதிய வாக்காளர்களை பதிவு செய்வதற்கான பணிகள் நேற்று நடந்தன.


இதையடுத்து,  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஓட்டுச்சாவடிக்குள், நேற்று நுழைந்த தற்கொலைப் படை பயங்கரவாதி, மறைத்து வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். 


இந்த தாக்குதலில், பொது மக்கள் 50 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயம் படுகாயமடைந்தனர். 


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரது நிலை, கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என, அஞ்சப்படுகிறது.


மேலும், இந்த தாக்குதலுக்கு, இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிபிடத்தக்கது.