தமிழகத்தில் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம்!
![தமிழகத்தில் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம்! தமிழகத்தில் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம்!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/06/04/131371-130160-130038-chennai-vaanilai.jpg?itok=oM6Unyhp)
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது -வானிலை ஆய்வு மையம்!
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது -வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில் தொடங்கியது, இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில்..!
மே மாதம் 29-ல் சில பகுதிகளில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் பரவியுள்ளது. இதையடுத்து, சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.