ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்று வரும் கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் இந்திய ஹாக்கி அணி மலேசியா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

21_வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் போட்டி மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன.


இந்நிலையில், இந்தியாவின் ஹாக்கி அணி சார்பில் இன்று களமிறங்கிய ஹர்மர்பிரீத்,  முதல் ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்ததை தொடர்ந்து இந்தியா 1-0 என்று முன்னிலை வகித்தது. இருப்பினும், ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்தில் மலேசிய அணி ஒரு கோல் அடித்ததின் மூலம்  1-1 என்று ஆட்டத்தை சமன் செய்தது.


எனினும், ஆட்டத்தின் 44ஆவது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் மீண்டும் ஒரு கோல் அடித்ததில் இந்தியா 2-1 என்ற நிலையில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.


எனவே, மலேசியாவுக்கு எதிரான ஆடவர் போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் இந்தியா வெற்றி பெற்று அரை இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.