ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவிற்கு கிடைத்தது 10 தங்கம்!!
நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் 10 தங்க பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
நேபாள நாட்டில் தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் 21ந்தேதி தொடங்கி நடைபெற்றன.
இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், பூடான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இவற்றில், மகளிர் ஒற்றையர் பிரிவில் 7 தங்கம் மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3 தங்கம் என 10 தங்க பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்தன.
இவற்றில், 10 தங்கம், 3 வெண்கல பதக்கங்களையும் வென்று மொத்தம் 13 பதக்கங்களுடன் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இவற்றில் நேபாளம் 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 13 வெண்கல பதக்கங்களுடன் 21 பதக்கங்களை கைப்பற்றி இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதேபோன்று பாகிஸ்தான் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது.
அதனை தொடர்ந்து வங்காளதேசம் 2 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களையும் கைப்பற்றி உள்ளன.
மேலும், பூடானுக்கு ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.