21_வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் போட்டி மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில், இந்தியா 10 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்கள் பெற்று பதக்கப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது!


ஆஸ்திரேலியா 38 தங்கம், 32 வெள்ளி, 33 வெண்கலத்துடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 22 தங்கம், 24 வெள்ளி, 16 வெண்கலத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.


கனடா, ஸ்காட்லாந்து, நியூஸிலாந்து உள்ளிட்டவை முறையே நான்காவது, ஐந்தாவது, ஆறாம் இடங்களை வகிக்கின்றன.


இந்நிலையில், இந்தியாவின் ஹாக்கி அணி சார்பில் இன்று களமிறங்கிய ஹர்மர்பிரீத்,  இந்தியா 2-1 என்ற நிலையில் மலேசியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.


இதை தொடர்ந்து, பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டது.