ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்று வரும் கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியின் ஆடவர் டேபில் டென்னிஸ் போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

21_வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது.  காமன்வெல்த் போட்டி மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன. 


இந்நிலையில் இன்றைய 5-ஆம் நாள் போட்டியில் இந்தியாவின் ஆடவர் டேபில் டென்னிஸ் வீரர்கள் சத்தியன் ஞானசேகரன் - ஹர்மீட் தேசாய் ஜோடி நைஜீரியாவின் ஓமோட்டோயோ - போட் அபியூட்டன் ஜோடியினை 11-8 11-5 11-3 என்ற கணக்கில் வென்றனர். இப்போட்டியின் வெற்றியின் மூலம் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா தனது 9-வது தங்கத்தினை பதிவு செய்தது. 


டேபில் டென்னிஸ் பிரிவில் நேற்றைய தினர் மகளிர் அணி தங்கம் வென்றதால், இந்தியாவிற்கு டேபில் டென்னிஸ் பிரிவில் கிடைக்கும் இரண்டாவது தங்கம் இது.


இதுவரை பதக்கம் பெற்றவர்களின் பட்டயல்...