உத்தரப்பிரதேசத்தில் அடர் மூடுபனியால் அடுத்தடுத்து பத்து கார்கள் மோதியதால் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேசத்தின் உண்ணா மாவட்டத்தில் உள்ள பங்காமாவுக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கடந்த ஒரு மாதா காலமாகவே வட இந்தியாவில் ஒரு சிலபகுதியில் அதிக பனி மூட்டம் நிலவி வருகிறது.


அதில் ஒரு பகுதியான லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ்ஸின் ரயில்வேக்கு அருகே இன்று காலை பனி மூட்டம் அதிகமான நிலையில் அங்கு அடுத்தடுத்து வந்த பத்து கார்கள் மோதியதால்  ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிசைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அதிக  பனி மூட்டம் காரணமாக அப்பகுதி இரவு போன்று காட்சியளிக்க்கிறது.