இந்தியக் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர்கள் குறித்த சில தகவல்கள்:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) 1950-ம் ஆண்டு இந்தியா குடியரசாக மாறியதில் இருந்து 14 பேர் இந்தியாவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர் தங்களது பதவிக்காலமான ஐந்தாண்டுகளை நிறைவு செய்துள்ளனர். இதில், ராஜேந்திர பிரசாத் மட்டுமே குடியரசுத் தலைவர் பதவிக்கு இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


2) ஜாகிர் ஹுசைன் மற்றும் ஃபக்ருதீன் அலி அகமது ஆகிய இரண்டு குடியரசுத் தலைவர்கள் பதவியில் இருந்தபோதே மரணமடைந்தனர். இருவரும் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே பதவியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாகீர் உசேன் மே 3, 1969-ல் இறந்தார். ஃபக்ருதீன் அலி அகமது பிப்ரவரி 11, 1977-ல் இறந்தார். 


3) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத், மிக நீண்ட பதவிக் காலம் பதவி வகித்த குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் 12 ஆண்டுகள் 107 நாட்கள் பதவியில் இருந்தார். 1952 மற்றும் 1957 தேர்தல்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடியரசுத் தலைவராக தேர்வாவதற்கு முன், ராஜேந்திர பிரசாத் அரசியலமைப்பு சபையின் தலைவராக இருந்தார்.


4) ஜாகிர் ஹுசைனின் மரணத்திற்குப் பிறகு, குடியரசு துணைத் தலைவரான வி.வி.கிரி தற்காலிகக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கா மூன்று மாதங்களுக்குள் அவர் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24, 1969 அன்று விவி கிரி குடியரசுத் தலைவராகப் பதவியேற்கும் வரை 35 நாட்களுக்கு அப்போதைய தலைமை நீதிபதி முகமது ஹிதாயத்துல்லா,  தற்காலிக குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார்.


5) 1977-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட 36 பேரின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டதையடுத்து, நீலம் சஞ்சீவ ரெட்டி  குடியரசுத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் 1977ல் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவில்லை. முன்னதாக, 1969-ம் ஆண்டு தேர்தலில் அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளராக இருந்தாலும், நீலம் சஞ்சீவ ரெட்டி வி.வி.கிரியிடம் தோல்வியடைந்தார்.


மேலும் படிக்க | எதிர்க்கட்சிகளின் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக களம் இறங்கும் மார்கரெட் ஆல்வா


6) 1962-ம் ஆண்டு குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட எஸ்.ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவரக இருந்து குடியரசுத் தலைவராகத் தேர்வான முதல் நபர் ஆவார். இவரைத் தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜாகீர் உசேன் மற்றும் வி.வி. கிரி ஆகியோர் முறையே 1967 மற்றும் 1969-ல் குடியரசுத் தலைவராகத் தேர்வாகினர்.


7) இந்திய வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பதவி வகித்த குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் ஆவார். 1967-ம் ஆண்டு குடியரசுத் தலைவரான அவர், இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே பதவியில் இருந்தார். 


8) 1977-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்  அப்போதைய குடியரசுத் தலைவரான பக்ருதீன் அலி அகமதுவின் மரணத்திற்குப் பிறகு, துணை ஜனாதிபதி பி.டி. ஜெட்டி ஐந்து மாதங்களுக்கும் மேலாக செயல் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். அவர் பிரதமர் மொரார்ஜி தேசாய் மற்றும் அவரது அமைச்சர்கள் குழுவிற்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.


9) இந்தியாவில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் மிகவும் சுவாரசியமான தேர்தல் 1969-ல் நடைபெற்றது. அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வேட்பாளரான நீலம் சஞ்சீவ ரெட்டி, இந்திரா காந்தியால் மறைமுகமாக ஆதரிக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளரான வி.வி.கிரியிடம் தோல்வியடைந்தார். 17 மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் 11 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வி.வி.கிரிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.


10) 1957 தேர்தலில், ராஜேந்திர பிரசாத் 98.99 சதவீத வாக்குகளைப் பெற்றார். அதற்கு அடுத்தத் தேர்தலில், ராதாகிருஷ்ணன் 98.25 சதவீத வாக்குகளைப் பெற்றார். அதற்கு அடுத்ததாக 1997-ம் ஆண்டு தேர்தலில் 
கே.ஆர்.நாராயணன் சுமார் 95 சதவீத வாக்குகளைப் பெற்றார்.


மேலும் படிக்க | President of India: குடியரசுத் தலைவர் பெறும் சம்பளம் மற்றும் இதர வசதிகள் என்ன


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ