அதிர்ச்சி! 11-ம் வகுப்பு மாணவனை 20 முறைக்கு மேல் கத்தியால் குத்தி கொலை செய்த 10 பேர்
Faridabad Crime News: உடலில் பலமுறை கத்தியால் குத்தி 11-ம் வகுப்பு பள்ளி மாணவனை கொலை செய்த 10 மாணவர்கள். இப்போது உன் வீரத்தை காட்டு எனக்கூறிக்கொண்டே 20 முறை கத்தியால் குத்து
ஃபரிதாபாத்தில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய 16 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்டான். அந்த சிறுவனை அவனது சொந்தப் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களை பிடிக்க விரசனை நடத்தப்பட்டு வருகிறது எனவும் போலீசார் கூறினார். இந்த கொலை சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வயிறு, முகம், மார்பு, தோளில் கத்தி குத்து
இதுவரை போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, பரிதாபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவனை செவ்வாய்க்கிழமை அன்று பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மதியம் 3:30 மணிக்குப் பிறகு பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்கிய அந்த மாணவர், நண்பரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது தான் அவர் தாக்கப்பட்டுள்ளார். மாணவனின் வயிறு, முகம், மார்பு மற்றும் தோள்பட்டை ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்டது.
மேலும் படிக்க: ஒன்றரை வயது இரட்டை பெண் குழந்தைகளைக் கொன்ற தாய்! அம்மாவும் தற்கொலை செய்த சோகம்
இப்போது உன் வீரத்தை காட்டு
காத்தியால் குத்தப்பட்டு இறந்த மாணவனை 10 மாணவர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டியில் பின்தொடர்ந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். எனது மகனை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளி, அவனை துஷ்பிரயோகம் செய்து தாக்கினர். மொத்தம் 20 முறைக்கு மேல் கத்தியால் குத்தியுள்ளனர். குத்தும் போது கும்பலாக வந்த மாணவர்கள் "இப்போது உன் வீரத்தை காட்டு" என்று கூறிக்கொண்டே கத்தியால் குத்தி உள்ளனர் என இறந்தவரின் மாமா கூறினார். அந்த சம்பவத்தை இரண்டு நேரில் பார்த்த சாட்சிகளுக்கு கும்பலாக வந்த மாணவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். கிடைத்த தகவலின்படி, கூட்டம் கூடியதையடுத்து கும்பலாக வந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
பள்ளியில் தகராறு
பிப்ரவரி 18 ஆம் தேதி அவர்களது வீட்டில் திருமணம் நடைபெற உள்ளதாக இறந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். வீட்டில் உள்ள அனைவரும் திருமணத்திற்கான பொருட்களை வாங்குவதில் மும்முரமாக இருந்தனர். இந்தக் கொலைக்கான காரணம் அவர்களுக்குத் தெரியவில்லை. இறந்தவர் கடந்த வாரம் பள்ளியில் சில மாணவர்களுடன் சண்டையிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அவரது மாமா கூறுகையில், எங்கள் பையன் பள்ளியில் சண்டை போட்ட அதே மாணவர்களால் கொலை செய்யப்பட்டார் என்று உறுதியாக சொல்ல முடியாது. இந்த சம்பவத்தை நேரில் இருவர் பார்த்துள்ளனர். அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. நேரில் பார்த்தவர்களை ஏதாவது சொன்னால் கொன்று விடுவதாக அந்த மாணவர்கள் மிரட்டியுள்ளனர் என்றார்.
சிக்கிய சிசிடிவி காட்சிகள்
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இரண்டு இடங்களில் இருந்து சிசிடிவி காட்சிகள் மீட்கப்பட்டுள்ளன. சில சந்தேக நபர்கள் 16 வயது சிறுவனை துரத்திச் செல்வதை காட்சிகளில் காணலாம். தாக்குதல் நடத்தியவர்களின் கைகளில் கத்திகளும் காணப்படுகின்றன. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் உள்ளூர் காவல்துறை சிங் தெரிவித்துள்ளது. குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata