பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை முதல் மாநிலமாக குஜராத் நடைமுறை படுத்துகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதை அடுத்து, குடியரசுத்தலைவர் ஒப்புதலின் அடிப்படையில் சட்ட வடிவம் பெற்றுள்ளது.



இந்நிலையில், மத்திய அரசு அறிவித்த 10% இட ஒதுக்கீட்டை முதல் மாநிலமாக குஜராத் அரசு அமல்படுத்துகிறது. இம்மாநிலத்தில் இன்று முதல் இந்த சட்டம் அமலுக்கு வருவதாக அம்மாநில முதல்வர் விஜய் ருபானி அறிவித்துள்ளார்.