மத்தியப் பிரதேசத்தின் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற 105 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதியானதை அடுத்து மணமக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது மைத்துனியின் திருமணத்தில் கலந்து கொள்ள மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவுக்கு வந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது திருமண நிகழ்வில் பங்கேற்ற 105 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.


இதனையடுத்து, கொரோனா சோதனைக்கு சாதகமாக கண்டறியப்பட்ட 105 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வேதனையளிக்கும் விதமாக பாதிப்புக்குள்ளான நபர்களில் மணமக்களும் இடம்பெற்றுள்ளனர். இதையடுத்து திருமணம் முடிந்த கையுடன் மனமக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என உள்ளூர் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தகவல்கள் படி இந்த சம்பவம் நகரில் ரம்பாக் தபால் நிலையம் அருகே அமைந்துள்ள ஒரு தெருவில் உள்ளது. மணமகளின் மைத்துனரே நிகழ்வில் பங்கேற்ற அனைவரது கொரோனா தொற்றுக்கும் காரணமானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த பகுதி தற்போது கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நிர்வாகம் முழுப் பகுதியையும் தடுப்புகளால் முத்திரையிட்டது. மணமகளின் மைத்துனர் டெல்லியில் இருந்து பிபரியா மற்றும் ஜுனார்டியோ வழியாக சிந்த்வாராவுக்கு வந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்த நபர் 4-5 நாட்கள் சிந்த்வாராவில் இருந்தார் எனவும், அத்தகைய சூழ்நிலையில், குடும்ப உறுப்பினர்களுக்கும் வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இந்நிலையில் நிர்வாக குழு கொரோனா தொற்று கொண்ட நபருடன் தொடர்பு கொண்டவர்களையும் தேடி வருகிறது. அந்த நபருடன் தொடர்பு கொண்ட அனைவருமே தங்கள் கொரோனா பரிசோதனையை நடத்த முன்வந்து முன்வருமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு செய்வது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும் எனவும் வலியுறுத்தியுள்ளது. 


திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்த பின்னர், அவர்கள் சிங்கோடி தங்குமிடம், பெண்கள் கல்வி வளாகம் மற்றும் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளனர் என நிர்வாக குழு தெரிவித்துள்ளது.


மொழியாக்கம் : அரிஹரன்