ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இருவரை அசாம் மாநிலத்தை சேர்ந்த 11-வயது சிறுவன் காப்பாற்றியுள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அசாம் மாநிலம் சோனிட்பூர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் உத்தம் டாட்டி. சோனிட்பூர் பகுதியில் உள்ள ஆற்றைக் கடக்கும் பொழுது அடித்து செல்லப்பட்ட ஒரு பெண் மற்றும் அவரது குழந்தையை காப்பாற்றியுள்ளான். இந்த சம்பவத்தால் அந்த சிறுவன் மாநிலம் முழுவதும் சூப்பர் ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறான்.


சோனிட்பூர் பகுதியில் இருக்கும் பிரம்மபுத்திராவின் கிளை ஆறு ஒன்றை குறிப்பிட்ட அந்த பெண்ணும் அவரது குழந்தையும் கடக்க முயன்றுள்ளனர். அப்போது, மழை பெய்து இருந்ததால் ஆற்றில் திடீரென்று தண்ணீரின் அளவு அதிகரித்தது.



இதனால், அப்பெண் தனது குழந்தையுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதைப்பார்த்த சிறுவன் உத்தம் டாட்டி, தண்ணீரில் குதித்து அப்பெண் மற்றும் அவரது குழந்தையையும் காப்பாற்றியுள்ளான். இச்சிறுவனின் வீரதீர செயலை தேசிய அளவில் அங்கீகரிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்த பட்டுள்ளதாக அம்மாவட்ட நீதிபதி லக்கியா ஜோதி தாஸ் தெரிவித்துள்ளார்.


சிறுவனின் துணிச்சலான இந்த செயல் அங்குள்ள மக்களை பெரிதும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சிறுவனின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.