சீதாபூர் பகுதியில் வசிக்கும் ஒரு நபர் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 39,980-யை நெருங்கியுள்ளது. இதுவரை தொற்று நோயால் உயிரிலந்தவர்களின் எண்ணிக்கை 1301-யை நெருங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாட்டில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 110 புதிய வழக்குகள் பதிவாகின்றன என்று தரவு காட்டுகிறது. கடந்த 24 மணிநேர தரவுகளின்படி, நாட்டில் ஒவ்வொரு மணி நேரமும் 3 பாதிக்கப்பட்ட நோயாளிகள் இறந்தனர்.


கடந்த நான்கு நாட்களில், இந்தியா நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 10,000 க்கும் மேற்பட்ட வழக்குகளையும் 300 க்கும் மேற்பட்ட இறப்புகளையும் பதிவு செய்தது. என்னதான் கொரோனா அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்கள் மற்றொரு பக்கம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. 


சீதாபூர் பகுதியில் வசிக்கும் ஒரு நபர் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பொலிசார் ஞாயிற்றுக்கிழமை (மே 3) தெரிவித்தனர். சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாகவும், சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீஸ் சூப்பிரண்டு L.R.குமார் தெரிவித்தார்.


"IPC மற்றும் POCSO சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் நிலை சீராக உள்ளது, அவர் மாவட்ட மருத்துவமனையில் உள்ளார்" என்று குமார் கூறினார். "அதே இடத்தைச் சேர்ந்த மற்றொருவரை பொலிசார் விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர், மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்று குமார் மேலும் தெரிவித்தார்.