இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 1,149 பேருக்கு கொரோனா; மொத்த எண்ணிக்கை 22,333
சென்னையில் மேலும் 804 பேருக்கு கொரோனா பாதிப்பு... மொத்தம் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 4802 ஆக உயர்ந்துள்ளது....
சென்னையில் மேலும் 804 பேருக்கு கொரோனா பாதிப்பு... மொத்தம் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 4802 ஆக உயர்ந்துள்ளது....
தமிழகத்தில் இன்று மேலும் 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று மேலும் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 95 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 22,333 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 72 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 12,807 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 10 பேரும், மதுரை, காஞ்சிபுரம் மற்றும் நாமக்கலில் தலா ஒருவர் என மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது.
#COVID19 positive cases&13 deaths have been reported in Tamil Nadu today. Total number of positive cases stand at 22,333&death toll is at 173: State Health Department pic.twitter.com/n6m4tDmTQE
— ANI (@ANI) May 31, 2020
தமிழகத்தில் இன்று 12089 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 491962 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களில் எண்ணிக்கை 9400 ஆக உள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். இதில் சிலர் 40 வயதுக்கும் குறைவான நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. ZEENEWS TRENDING STORIESBy continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link |