கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் 12 வயதிலேயே தந்தையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சிறுவன் மிக சிறிய வயதிலேயே பருவமடைந்துள்ளான். இவனுக்கும் 17 வயது சிறுமிக்கும் ஏற்பட்ட தொடர்பில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆஸ்பத்திரியில் பிறந்த 


குழந்தைக்கும், சிறுவனுக்கும் மரபணு சோதனை நடத்தப்பட்டது. இருவரின் ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனைகளில் அந்த குழந்தை 


சிறுவனுக்கு பிறந்தது என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுவன் மீது கேரள போலீசார் போஸ்கோ(POCSO) சட்டப்படி வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


இச்சம்பவம் பற்றி திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உட்சுரப்பியல் பிரிவின் தலைவர் டாக்டர் ஜாபர் கூறியதாவது:-


பருவ வயதை அடையும் முன்பு ஒருவரால் குழந்தை பெற இயலாது. ஆனால் இச்சிறுவன் மருத்துவ ரீதியாக குழந்தை பெறும் நிலையை அடைந்துள்ளார். மருத்துவத்தில் இதனை வயதுக்கு மீறிய வளர்ச்சி என்று கூறுவார்கள். மருத்துவ உலகில் இது போன்ற நிகழ்வுகள் எப்போதாவது நடைபெறும். 


அதாவது, சிறுவர்களாக இருக்கும் இவர்களது உடல் பருவமடைதல் என்பது பெண் குழந்தைகளுக்கு 8 வயதிலும், ஆண் குழந்தைகளுக்கு 9 வயதிலும் நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.