பொய் தகவலை அளித்து ஆதார் எண் பெற்ற 127 பேருக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (uidai) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹைதராபாத்திலுள்ள இந்திய தனித்துவ அடையாளம் ஆணைய அலுவலகத்தால் அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியோருக்கு ஆதார் அளிக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. 


இந்நிலையில் தற்போது பொய் தகவலை அளித்து 127 பேரும் ஆதார் எண் பெற்றிருப்பதாக போலீஸாரிடம் இருந்து அறிக்கை வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 20 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி 127 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.