உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் திருமணத்தில் 13 பெண்கள் பரிதாப சாவு
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் திருமணத்தில் கலந்துக் கொள்ள சென்ற பெண்கள் கிணற்றின் மேடை உடைந்த விபத்தில் பரிதாப பலி
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கிணற்றின் மீது போடப்பட்டிருந்த பலகை உடைந்ததில் அதில் அமர்ந்திருந்த பெண்கள் கிணற்றில் விழுந்துவிட்டனர். 13 பேர் உயிரிழந்தனர்.
கோரக்பூர் மண்டலத்தின் ஏடிஜி அகில் குமார் கூறுகையில், "13 பெண்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 8.30 மணியளவில் குஷிநகரில் உள்ள நெபுவா நவுராங்கியாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமண நிகழ்ச்சியின் போது சிலர் கிணற்றின் பலகையில் அமர்ந்து கொண்டிருந்தனர். அதிக சுமை காரணமாக, ஸ்லாப் உடைந்தது."
இதுகுறித்து குஷிநகர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: திருமண நிகழ்ச்சியின் (Marriage Function) போது சிலர் கிணற்றின் மீது அமர்ந்திருந்தபோது அதிக பாரம் ஏற்றியதால் பலகை உடைந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | இந்தியாவின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு சச்சின் தேவுக்கும் விரைவில் திருமணம்
குஷிநகரின் நெபுவா நவுராங்கியா காவல் நிலையப் பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்” என்று முதல்வர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்ச ரூபாயை குஷிநகர் மாவட்ட ஆட்சியர் இழப்பீடாக அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வியாழன் (பிப்ரவரி 17, 2022) உத்தரபிரதேசத்தின் குஷிநகரின் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து (Prime Minister's National Relief Fund (PMNRF)) வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
மேலும் படிக்க | தேவைக்கு அதிகமானால் ஆபத்தை ஏற்படுத்தும் பழக்கங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR