கேரளா: நாட்டின் இளம் மேயரான ஆர்யா ராஜேந்திரனுக்கும் பாலுச்சேரி தொகுதி எம்எல்ஏ கேஎம் சச்சின் தேவுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை புதன்கிழமை (பிப்ரவரி 16) சச்சின் தேவின் தந்தை கே.எம்.நந்தகுமார் அறிவித்தார். மேலும் சிறுவயதில் இருந்தே ஆர்யாவும், சச்சினும் இந்திய மாணவர் சங்கத்தில் வளர்ந்தவர்கள். அதனால் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு உள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வது பொருத்தமாக இருக்கு என்றார் சச்சின் தேவின் தந்தை.
திருவனந்தபுரம் மேயராக இருக்கும் ஆர்யா ராஜேந்திரன், 2020ல் தனது 21வது வயதில் மேயரானார். அதேபோல 28 வயதான சச்சின் தேவ், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாலுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும் திரைப்பட நடிகருமான தர்மஜன் போல்காட்டியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
ஆர்யாவும் சச்சினும் மாணவ பருவத்திலிருந்தே ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள் மற்றும் இந்திய மாணவர் கூட்டமைப்பில் (SFI) இணைந்து பணியாற்றியவர்கள். சச்சின் தேவ் SFI இன் தற்போதைய அகில இந்திய இணைச் செயலாளராகவும் உள்ளார்.
மேலும் படிக்க: நான் இவரைதான் கல்யாணம் பண்ணிப்பேன் : ரஷ்மிகா ஓபன் டாக்
ஆர்யா ராஜேந்திரன் 2020 இல் 21 வயதில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக பதவியேற்றபோது நாட்டின் இளம் மேயர்களில் ஒருவரானார். அவர் முடவன்முகல் வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து, அவரை கட்சி கவுன்சிலராக தேர்ந்தெடுத்தது. அப்போது ஆர்யா, ஆல் செயின்ட்ஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி. மாணவியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா ராஜேந்திரன் சிறுமியாக இருக்கும்போதே சி.பி.எம் அமைப்பின் பால சங்கத்தில் இணைந்தார். பின்னர் அந்த சங்கத்தின் மாநிலத் தலைவராக பொறுபேற்றார். அதேநேரத்தில் மாணவர் சங்கமான எஸ்.எஃப்.ஐ மாநில கமிட்டி உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்தார்.
ஆர்யா ராஜேந்திரன் மற்றும் சச்சின் தேவ் ஆகியோரது திருமணத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் திருமணம் ஒரு மாதத்துக்குப் பிறகு நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: Marriage: பேயை கல்யாணம் செய்யும் பாடகி! திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR