அதிர்ச்சி! மாரடைப்பால் உயிரிழந்த 7ஆம் வகுப்பு மாணவி!
7ஆம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளிக்கு செல்லும் வகையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வயது முதிர்ந்தவர்கள் மட்டுமன்றி மிக சிறுவயதுடையவர்கள், இளைஞர்கள் என பலரை மாரடைப்பு காவு வாங்கியுள்ளது. விளையாடி கொண்டிருந்த போது உயிரிழப்பு, மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த போது உயிரிழப்பு என மாரடைப்பு உயிரிழப்புகள் மட்டும் இந்தியாவில் அதிகரித்துள்ளன. இதே போன்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம்தான் தற்போது கர்நாடக மாநிலத்திலும் நிகழ்ந்துள்ளது.
7ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு..
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூருவில் தாரதஹள்ளி என்ற ஆரம்ப பள்ளி உள்ளது. இதில், அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இவர் மயங்கி விழுந்ததை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.
மேலும் படிக்க | MPs Suspended: தொடரும் சஸ்பெண்ட்! இன்று 2 பேர் .. இதுவரை 143 பேர் இடைநீக்கம்
மாரடைப்பால் உயிரிழப்பு..
மயங்கி விழுந்த சிறுமி, தாரதஹள்ளி ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | சாண்டா கிளாஸ் ஆக மாறிய ரோஜா..! ஆனந்த கண்ணீர் விட்ட குடும்பம்! குவியும் பாராட்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ