வட இந்தியாவின் பல பகுதிகளில் மூடுபனி காரணமாக குறைந்தது 14 டெல்லி செல்லும் ரயில்கள் பல மணி நேரம் தாமதமாகின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காலை டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடர்த்தியான மூடுபனியுடன் காணப்பட்டது. இதனால் ரயில், விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் குறைந்த காண்புதிறன், பனிமூட்டம் ஆகியவற்றின் காரணமாக ரயில்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 


டெல்லி (Delhi) உட்பட வட இந்தியா (North India) முழுவதும் குளிர் (Cold) தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லி மட்டுமல்ல, அதனை சுற்றியுள்ள பகுதிகளான நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் குருகிராம் ஆகிய மாவட்டங்களில் கடும் குளிர் தொடர்கிறது. 


இந்நிலையில் தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடரும் பனிமூட்டம் காரணமாக புது டெல்லி நோக்கி வந்து கொண்டிருக்கும், 14 ரயில்கள் தாமதம் அடைந்துள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


Train no: Trains running late Late by hours
12397  Gaya-New Delhi Mahabodhi Express 2.30
15955  Dibrugarh-Delhi In Brahmaputra Mail    2.00 
12381  Bhubaneswar-New Delhi Durunto 1.00
12367  Bhagalpur-Anand Vihar Vikramshila Express  2.00 
20801  Islampur-New Delhi Magadh Express  1.00
22409  Gaya-Anand Vihar Terminal Express  1.30
22167  Singrauli-Nizamuddin Express    2.00
11057  Mumbai-Amritsar       3.00 
12919  Ambedkar Nagar-Katra Malwa Express 1.30
12121  Jabalpur-Nizamuddin MP Sampark Kranti    2.00
14257  Varanasi New Delhi Kashi Vishwanath 2.00
15273   Raxaul Anand Vihar Satyagrah Express 2.30
14205  Faizabad Delhi Faizabad Express  1.00
22402  Udhampur Delhi Sarai Rohilla AC Express 1.00

காண்புத்திரன் குறைவாக இருப்பதால் குறைந்தது 25 டெல்லி செல்லும் ரயில்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தாமதமாக வந்தன. மேலும் வடக்கு ரயில்வே பிராந்தியத்தில் குறைந்தது 14 டெல்லி செல்லும் ரயில்கள் ஒன்று முதல் ஐந்து மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன.