நாட்டில் 1,495 ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை: மத்திய அரசு தகவல்!!
நாட்டில் பல்வேறு துறைகளுக்கும், பணிகளுக்கும் 1,495 ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறையாக இருக்கின்றனர் என்று மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டில் 6,500 ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்க வேண்டிய நிலையில், 5,004 அதிகாரிகள் இருக்கின்றனர். 1,496 இடங்கள் காலியாக இருக்கின்றன.என மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது.
>உத்தரப்பிரதேசத்தில் 621 ஐஏஎஸ் அதிகாரிகள் தேவைப்படும் நிலையில், 515 அதிகாரிகள் மட்டுமே இருக்கிறார்கள்.
>பீகாரில் 342 அதிகாரிகளுக்கு 243 அதிகாரிகளும், மேற்கு வங்காளத்தில் 359 அதிகாரிகளுக்கு 277 அதிகாரிகளும், மத்திய பிரதேசத்தில் 439 அதிகாரிகளுக்கு 341 அதிகாரிகளும், கேரளாவில் 231 அதிகாரிகளுக்கு 150 அதிகாரிகளும் பணியில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
>தமிழகத்தில் மொத்தம் 376 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதிலாக 289 அதிகாரிகள் மட்டுமே பணியில் உள்ளனர். தமிழகத்தில் 87 அதிகாரிகள் பற்றக்குறை உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
>இதேபோல தெலங்கானாவில் 130 ஐஏஎஸ் அதிகாரிகள், இமாச்சலப் பிரதேசத்தில் 115 அதிகாரிகள், ஜம்மு காஷ்மீரில் 91 அதிகாரிகள், நாகாலாந்தில் 67, சிக்கிம்மில் 37, குஜராத்தில் 241 அதிகாரிகள் பற்றாக்குறையாக இருக்கிறார்கள்.
>கடந்த 6 ஆண்டுகளாக ஐஏஎஸ் தேர்வில் அதிக அளவில் நபர்களைத் தேர்வு செய்து வருகிறோம். மேலும், பதவி உயர்வு, மாநிலத்தில் ஐஏஎஸ் தரத்துக்கு உயர்வதற்கான பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்கள் குறித்து குழு அமைத்து காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.