15 வயது சிறுமியை கற்பழித்து தீ வைத்த கும்பல்!
15 வயது சிறுமியை ஆறு பேர் கொண்ட கும்பல் கற்பழித்து, தீ வைத்த எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியபிரதேசத்தில் உள்ள சாகர் டிவால் கிராமத்தில் 15 வயது நிறைந்த சிறுமியை கடந்த டிசம்பர் 7 அன்று ஆறு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கற்பழித்ததுடன்.அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தீ வைத்த எரித்துள்ளனர்.
உயிருக்கு போராடிய அந்த சிறுமியை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பன்டெல்கான் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமி, சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது மத்தியபிரதேசத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதைக்குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.