ராஜஸ்தான் மாநிலம் கோடாவில், குழந்தை தொழிலாளர்களாக பணிபுரிந்த 17 பேர் சிறுவர் நலன்புரிக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தை தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்து இச்சிறுவர்களை சிறுவர் நலன்புரிக் குழு (CWC) அதிகாரிகளின் முயற்சியால் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த அமைப்பின் தலைவர் ஹரிஸ் குருபாகஹனி இதுகுறித்து தெரிவிக்கையில், மீட்கப்பட்ட 17 பேரில் 12 பேர் 18 வயதுக்கு உட்பட்வர்கள் எனவும், ரூ.3000 சம்பளத்திற்கு காலை முதல் இரவு வரை வேலை புரிய பணிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.


இவர்கள் வேலை புரிந்த சேலை உற்பத்தி தொழிற்சாலையின் உரிமையாளர், உத்திரபிரதேச மாநிலம் சித்தபுரா பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது!


மீட்கப்பட்ட சிறுவர்களை அவர்களின் சொந்த ஊரில் சென்று பணிக்கு நியமித்துள்ளார். பின்னர் அவர்களை தொழிற்சாலைக்கு அருகில் கூடாரம் அமைத்து அங்கேயே தங்கவைத்துள்ளார்.


இச்சம்பவத்தில் இருந்து மீட்கப்பட்ட அனைவரையும் அவர்களது வீட்டிற்கு CWC அமைப்பினர் அனுப்பி வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்!