நாடுமுழுவதும் 180 புதிய இருப்புபாதைகளை அமைக்கும் பணிகளை தொடங்குவதற்கு இந்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடுமுழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் 180 புதிய இருப்புபாதை திட்டங்களை ரயில்வே நிர்வாகம் நடைமுறைப்படுத்தவுள்ளு என ரயில்வே துறை அமைச்சர் ராஜே கோஹேன், நேற்றைய கூட்டத்தொடரில் குறிப்பிட்டுள்ளார். இதில் பிஹாரில் மட்டும் 34 பாதைகள் அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


இந்த புதிய திட்டத்தின் படி பீகாரில் 34, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளில் 18, கேரளாவில் 2, தில்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றில் ஒன்று என பட்டியலிடப்பட்டுள்ளது.


ரயில்வே துறை அமைச்சரின் கருத்தின் படி.. இந்த புதிய இருப்புபாதை திட்டங்களானது, பொருளாதார பின்னோக்கி பகுதிகளில், விரைவான வளர்ச்சிக்கு பின்தங்கிய மற்றும் தொலைதூர பகுதிகள் என்னும் வரிசையில் பரிசீலனை செய்யப்பட்டு செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.


இந்த புதிய திட்டங்களை நிறைவு செய்வதற்கு, மாநில அரசு மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகளிலிருந்து நிலங்களை கையகப்படுத்துதல், வனவியல் மற்றும் வனவிலங்கு போன்ற துறைகளிடம் இருந்து சட்டப்பூர்வ அனுமதிகளை பெறுதல் மற்றும் பயன்பாடுகள் மாற்றுவதைப் போன்றது என அனைத்தினையும் நாடியுள்ளதால் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான காலமும் அதிகம் தேவைப்படுகிறது.