ஹரியானாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 90 MLA-க்களில் 17 பேர் குற்றப்பதிவு கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் 7 பேர் கடுமையான குற்றப்பதிவு வைத்திருப்பதாகவும் தெரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரியானாவில் சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, அரசாங்கத்தை உருவாக்கும் செயல்முறை தொடங்கியுள்ளது. இந்த தேர்தல்களில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது, சில நாட்களில் மாநிலத்தில் யாருடைய அரசாங்கம் அமைக்கப்படும் என்பது தெளிவாகிவிடும் என எதிர்பாரக்கப்படுகிறது.


ஹரியானா சட்டமன்றத்தில் மொத்தம் 90 இடங்கள் உள்ளது. இந்நிலையில் ஹரியானா தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தவாதிகள் சங்கம் (ADR) மாநிலத்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 90 MLA-க்களின் வாக்குமூலங்களை ஆய்வு செய்துள்ளன, இதன் மூலம் அவர்களின் நிதி, குற்றவியல் மற்றும் கல்வி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஆக., பிரமாணப் பத்திரத்தை ஆராய்ந்தபோது, ​​ஹரியானாவின் மொத்தம் 90 MLA-க்களில் 12 பேர் குற்றப் பதிவுகளை வைத்திருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர். 
அதாவது, புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் 13% MLA-க்கள் குற்றவியல் பதிவு வைத்திருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது. 2014 உடன் ஒப்பிடும்போது, ​​அந்த நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட MLA-க்களில் பத்து சதவீதம் பேர் குற்றப் பதிவுகளுடன் இருந்தனர். அதாவது, 90 MLA-க்களில் ஒன்பது பேர் குற்றப் பின்னணியை கொண்டவர்களாக இருந்தனர்.


இந்நிலையில் இந்த ஆண்டு 12 பேர் குற்றப்பதிவுகளை வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹரியானாவின் மொத்த 90 MLA-க்களில் ஏழு பேர் கடுமையான கிரிமினல் பதிவு வைத்திருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர், அதாவது மொத்தம் எட்டு சதவீத MLA-க்கள் கடுமையான குற்ற வழக்குகளைக் கொண்டுள்ளனர். 


அதே நேரத்தில் 2014-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஆறு சதவீதமாக இருந்தது, அதாவது ஐந்து MLA-க்கள் கடுமையான குற்றவியல் பதிவு வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.