1984 சீக்கிய கலவரம்: 88 பேரின் தண்டனையை உறுதிப்படுத்தியது DHC!
டெல்லியில் 1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை செய்த வழக்கில் 88 பேரின் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது!
டெல்லியில் 1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை செய்த வழக்கில் 88 பேரின் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது!
கடந்த 1984 அக்டோபர் 31 ஆம் நாள் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சீக்கிய மெய்காவலர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தச் செய்தி அறிந்ததும் டெல்லியில் இரு தினங்களுக்கு சீக்கியர்களுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் நடைபெற்றன.
கிழக்கு டெல்லியில் திரிலோக்புரி என்னுமிடத்தில் 95 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டன. வீடுகளைத் தீவைத்துக் கொளுத்தியதாகவும், சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் 88 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதில் தற்போது 47 பேர் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர்.
இது குறித்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனத்தீர்ப்பளித்ததுடன் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 88 பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது, அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதிசெய்தும் அவர்கள் அனைவரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.