ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு 3 ராணுவர்கள் வீர மரணம்
சோபியான் மாகாணத்தில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள கோபால்புரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து, அவர்கள் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்களை சரணடையுமாறு கூறினர். ஆனால், தீவிரவாதிகள் சரணடைய மறுத்து பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத் தொடங்கினர். இதையடுத்து, அவர்களுக்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர்.
குல்காமில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். சோபியான் மாகாணத்தில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 3 ராணுவ வீரர்களும் சிகிச்சை பலனின்றி வீர மரணம் அடைந்துள்ளனர். அவர்களிடம் இருந்து இரு ஏ.கே.47 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா என பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.