மத்திய பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு லாரி மோதியதில் ரயில் தடம்புரண்டது. இதில் ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


 



 


மத்திய பிரதேசத்தில் கோத்ரா-ரத்லம் இடையே உள்ள லெவல் கிராசிங் வழியாக இன்று காலை திருவனந்தபுரம் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. லெவல் கிராசிங்கின் கேட் மூடப்பட்டு, பிற வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த வழியாக வந்த ஒரு சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து  லெவல் கிராசிங் கேட்டை உடைத்து ரயில் மீது மோதியது.


இந்த விபத்தில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன. லாரியின் முன்பகுதியும் நொறுங்கியது. லாரி டிரைவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். தடம்புரண்டதால் பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.