பிஜப்பூர் பமேந்த் பகுதியில் நக்சலைட், பாதுகப்புப்படையினருக்கு இடையின் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு கமாண்டோ பட்டாலியன் படுகாயமடைந்துள்ளனர்..!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் இன்று, முதல்கட்டமாக 18 தொகுதிகளிலும், மீதமுள்ள 72 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20 ஆம் தேதியும் நடைபெறயுள்ளது.  


சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 தொகுதிகளில் எட்டு தொகுதிகள் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள தொகுதிகளாக கருதப்படுகிறது. இதனால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கபட்டிருந்தனர். 


இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பமேந் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அருகில் நக்சலைட் துப்பக்கிட்சூடு நடத்தியுள்ளனர். இதில் அச்சமடைந்த வாக்காளர்கள் ஓடத்துவங்கினர். இதையடுத்து பாத்கப்புபடையினர் நக்சலைட் மீது பதில் தாக்குதல் நடத்தியள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு 2 கமாண்டோ பட்டாலியன் (CoBRA) படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 



கடந்த வாரம் தூர்தர்ஷன் குழுவினர் மற்றும் அவர்களுடன் சென்ற வீரர்கள் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தியதில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உள்பட 4 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.