இலங்கை குண்டுவெடிப்பில் 2  ஜே.டி. (S) உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்; மேலும், 5 பேர் மாயமானதால் குமாரசுவாமி
அதிர்ச்சி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள், ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் நேற்று இப்பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாடினர். இலங்கையிலும் கிறிஸ்தவர்கள் வழக்கம்போல் உற்சாகமாக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர். அப்போது, கொழும்பு நகரில் கொச்சிகடே பகுதியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளதாகவும், சுமார் 500 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர். 



இந்த தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியானது. இந்நிலையில் இன்று சுஷ்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இலங்கை குண்டுவெடிப்புகளில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், அவர்கள் பெயர் கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த சம்பவத்தில் இதுவரை 5 இந்தியர்கள் பலியாகியுள்ளனர் எனவும் கூறினார். 


இந்த சம்பவம் குறித்து கர்நாடக முதல்வர் கூறுகையில், கொழும்புவிற்கு சுற்றுலா மேற்கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினைச் சேர்ந்த 7 தொண்டர்கள், நேற்று நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு  சம்பவத்திற்கு பின்னர்  மாயமானதாக தகவல் கிடைத்தது. இதனை கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன்.


அவர்கள் குறித்த தகவல் அறிய இந்திய தூதருடன் தொடர்பில் இருந்தேன். இன்று காலை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், உயிரிழந்த 5 இந்தியர்களுள் 2 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என அறிவித்திருந்தார். இதைக் கேட்டு மிகவும் வருந்தினேன். 



இந்த தாக்குதலில் மறைந்த கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா ஆகிய இருவரும் எனக்கு நெருக்கமான தொண்டர்கள் ஆவர். இருவரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் குடும்பத்தாருடன் என்றும் நான் துணை நிற்பேன்" என தெரிவித்துள்ளர்.