சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் நக்சலைட்டுகளின் 20 கிலோ வெடிகுண்டுகளை மீட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீப காலமாக பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே தொடர் மோதல் ஏற்ப்பட்டு வருகிறது.


அதில் ஒரு பகுதியாக தற்போது, சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் கிராமத்தில் நிர்மாண பாலம் அருகே பாதுகாப்பு படையினர் நக்சலைட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் 20 கிலோ வெடிகுண்டுகளை மீட்டுள்ளனர்.


கடந்த மார்ச் 11-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பேஜா என்ற பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது நக்சலைட்கள் தாக்குதல் நடத்தியதில் 9 வீரர்கள் பலியானார்கள்.


அதை தொடர்ந்து கடந்த அக்டோபர் 15, ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் அதிரடிப்படை போலீசார் நடத்திய தாக்குதலில் 5 நக்சலைட்டுகலும் இரண்டு போலீசாரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


மேலும், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜப்பூர் ஜங்லாவில் அதிரடிப்படை போலீசார் நடத்திய சோதனையில் 2 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது.