மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 20 பேர் பலி
மகாராஷ்டிராவின் துலே பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 20 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
புது தில்லி / மும்பை: மகாராஷ்டிராவின் துலே பகுதியில் இருந்து ஒரு பெரிய அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. ஷிர்பூர் தாலுகாவில் வாகடி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 20 பேர் இறந்துள்ளதாகவும், மேலும் 22க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொழிற்சாலை தீ விபத்தில் 70 பேர் இன்னும் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், பல தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மீட்பு குழுக்கள் நிவாரண பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன. தீயணைப்பு படையின் வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
தகவல்களின்படி, ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்து மிகவும் வலுவானதாக இருந்ததாகவும், அதன் சத்தம் பல கிலோமீட்டர் தொலைவரை கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது..