நாடுமுழுவதும் 200 புதிய ரயில்வே வழித்தடங்களை அறிமுகம் செய்யவுள்ளது மத்திய ரயில்வே துறை!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாராளுமன்ற கூட்டத்தொடரில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்மாக பதில் அளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் ராஜன் கொஹென் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.


இந்த புதிய ரயில் பாதை திட்டத்தினை நிறைவேற்ற நாடுமுழுவதும் அதிகளவு நிலப்பகுதி தேவைப்படுகிறது. மேலும் வனப்பகுதியினை பயன்படுத்தவேண்டி உள்ளதால் இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான காலமும், செலவினமும் அதிகம் தேவைப்படுகிறது. எனவே இத்திட்டத்திற்கான பட்ஜட்டினை ஒரே தவனையில் ஒதுக்காமல் வருடாந்திரம் என சில கட்டங்களாக ஒதுக்க வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இத்திட்டத்தில் பயன்பெறும் மாநிலங்கள்....


  • அஸாம் : 15

  • ஆந்திரா : 18

  • பிஹார் : 34

  • சத்தீஷ்கர் : 8

  • டெல்லி : 1

  • குஜராத் : 4

  • ஹரியானா : 7

  • இமாச்சல் பிரதேஷ் : 4

  • ஜம்மு காஷ்மீர் : 1

  • ஜார்கண்ட் : 14

  • கர்நாட்டகா : 16

  • கேரளா : 2

  • மத்திய பிரதேஷ் : 8

  • மகாராஷ்டிரா : 12

  • ஒடிசா : 10

  • பஞ்சாப் : 6

  • ராஜஸ்தான் : 10

  • தெலுங்கானா : 9

  • தமிழ்நாடு : 8

  • உத்திர பிரதேஷ் : 15

  • உத்ராகாண்ட் : 3

  • மேற்கு வங்காளம் : 18


முன்னதாக, தூய்மை இந்தியா 2017-18 திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே துறையால் 21 பசுமை பாதைகள் மற்றும் ரயில் பெட்டிகளில் பசுமை கழிவறைகள் போன்ற திட்டத்தினை புகத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.