இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்
02:02 மணிக்கு ஏற்பட்டுவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் நட்சத்திரம் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
2017-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்றய தினம் அதிகாலை 4:02:02 மணிக்கு ஏற்பட்டுவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் நட்சத்திரம் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சந்திரன் மறையும் நேரத்தில் இந்த சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. மேற்கு வானத்தில் சந்திரன் மறையும் போது அதிகாலை 4:02:02 மணிக்கு ஆரம்பமாகும் சந்திர கிரகணம் முற்பகல் 8:25:05 மணி வரை இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.