புது டெல்லி: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் முடிந்துவிட்டது. மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் தேர்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர். மே மாதத்தின் மூன்றாவது வாரத்தில் முடிவுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமக்கு கிடைத்த அறிக்கையின்படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 13 முதல் மே 17 ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. முதலில் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படலாம். அதன்பின்னர் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. சிபிஎஸ்இ தேர்வு முடிவு குறித்து, இதுவரை உத்தியோகபூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 31 அன்று அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


2019 ஆம் ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு பிப்ரவரி 21 ம் தேதி தொடங்கி மார்ச் 29 ஆம் தேதி வரை நடந்தது. அதே சமயம், 12 ஆம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பை சேர்ந்த மொத்தம் 3114821 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். அதில் மாணவர்கள் 1819077 பேர், மாணவிகள் 1295754 பேர் ஆவார்கள்.