டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 21 எம்.ஏல்.ஏக்களுக்கு ஆதாய பதவி வழங்கும் சட்ட திருத்தத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததால், கடந்த மாதம் பாராளுமன்ற செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ள 21 எம்.எல்.ஏக்களின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆதாயம் தரும் பதவிக்கு மத்திய அரசு கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்நிலையில் பாராளுமன்ற செயலாளர் என்பது ஆதாய பதவி அல்ல என்று அறிவிக்கும் மசோதாவை தில்லி சட்டசபை இயற்றியது. இந்த மசோதா ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்திய சட்டத்தின் படி ஒருவர் 2 பதவி வகிப்பது சட்ட விரோதமாக கருதப்படும் என்றும், இது சட்டத்திற்கு புறம்பானது என ஜனாதிபதி கையொப்பமிட மறுத்து விட்டார்.


இது குறித்து தனது டுவிட்டரில் மோடியை கடுமையாக சாடியுள்ள கெஜ்ரிவால்,  இது மோடி அரசின் சதி. டெல்லியில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வியை பிரதமரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் டெல்லி அரசை செயல்பட விடாமல் பிரதமர் தடுப்பதாகவும் தெரிவித்துள்ள கெஜ்ரிவால், அரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் நாடாளுமன்ற செயலர்கள் இருக்கும் போது டெல்லியில் மட்டும் நாடாளுமன்ற செயலர்களை தகுதி நீக்கம் செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.