ஒப்புகைச்சீட்டு விவகாரம் தொடர்பாக 21 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான குறைந்தபட்சம் 50% வாக்குகளை ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தி உள்ளன. ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் ஏதாவது 5 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்களை ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்து உத்தரவிட்டு இருந்தது.


முன்னாதக ஒப்புகை சீட்டு இயந்திரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இம்மாத துவக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்திருந்தது. 



அத்துடன் 5 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்களை மட்டும் ஒப்பிட்டு பார்த்தால் போதுமானது என கூறியிருந்தது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டுள்ளது தகவல்கள் வெளியாகியுள்ளது.


மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து தொடர்ந்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனினும் நடைப்பெரும் மக்களவை தேர்தலில் ஒப்புகை சீட்டு இணைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டை மேம்படுத்தினால் போதும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.


வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இழந்த எதிர்கட்சிகள் தங்களது கோரிக்கைகளை தளர்த்திக்கொண்டது ஒப்புகை சீட்டு இணைப்பால் வாக்கு பதிவை சரிபார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தான். ஆனால் தொகுதிக்கு 5 வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்குகளை மட்டுமே கொண்டு வாக்குகளை சரிபார்த்தல் என்பது மீண்டும் சந்தேகங்களை தூண்டுகிறது. இதன் காரணமாக 21 எதிர்கட்சிகள் ஒன்றினைந்து ஒப்புகை சீட்டு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.