மக்களவை தேர்தலில் போட்டியிடும் 213 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு: ADR அறிக்கை
முதல் மக்களவை தேர்தலில் போட்டியிடும் 213 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ADR அறிக்கை வெளியிட்டுள்ளது!!
முதல் மக்களவை தேர்தலில் போட்டியிடும் 213 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ADR அறிக்கை வெளியிட்டுள்ளது!!
இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆளும் கட்சி, எதிர் கட்சிகள் பல்வேறு இடங்களில் தீவிர தேர்தல் பிரட்சாரம் செய்து வருகிறார். இந்திய அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், 91 தொகுதியில் நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் 213 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது என தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் 1279 வேட்பாளர்களில் 1266 பேர் அபிடவுட் தாக்கல் செய்து உள்ளனர். இதில் 213 வேட்பாளர்கள் மீது கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கடுமையான குற்றங்களுக்கு எதிராக குற்றவழக்குகள் பதிவு செய்யபட்டு உள்ளன. வேட்பாளர்கள் தாக்கல் செய்த அபிடவுட்டை ஆய்வு செய்து, தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில் 213 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. மீதமுள்ள 13 வேட்பாளர்களின் வாக்குமூலங்கள், முறையான ஸ்கேன் செய்யப்பட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்கள் கிடைக்காததால், பகுப்பாய்வு செய்யப்படவில்லை.
அந்த அறிக்கைபடி 1266 வேட்பாளர்களில் 1 சதவீத வேட்பாளர்கள் தீவிர குற்றவியல் வழக்குகள் தங்களுக்கு எதிராக உள்ளதாக கூறி உள்ளனர். 12 சதவீதம் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள். 10 வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கொலை வழக்கு உள்ளதாக கூறி உள்ளனர். 25 வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு இருப்பதாக கூறி உள்ளனர். 4 வேட்பாளர்கள் கடத்தல் வழக்கு இருப்பதாகவும், 16 பேர் பெண்களுக்கு எதிரான வழக்கு இருப்பதாகவும் 12 வேட்பாளர்கள் அவதூறாக பேசியதாகவும் தங்களுக்கு எதிராக வழக்கு இருப்பதாக கூறி உள்ளனர்.
91 தொகுதிகளில் 31 தொகுதிகள் பதற்றமான தொகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக பாரதீய ஜனதாவின் 83 வேட்பாளர்களில் 30 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் 83 வேட்பாளர்களில் 35 பேர் மீது குற்றவழக்குகள் உள்ளன.பகுஜன் சமாஜ கட்சி வேட்பாளர்கள் 35 பேரில் 8 பேர் மீது குற்றவழக்குகள் உள்ளன. YSR காங்கிரஸ் வேட்பாளர்கள் 25 பேரில் 13 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. தெலுங்கு தேசம் வேட்பாளர்கள் 25 பேரில் 4 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி வேட்பாளர்கள் 17 பேரில் 5 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன என கூறப்பட்டு உள்ளது.