வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் பாஜக 22 இடங்களை கைப்பற்றிவிட்டால் அடுத்த 24 மணிநேரத்தில் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்ப்படும் என பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்களில் அதிக இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவானபோதும், பிஜேபியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. பெரும்பான்மைக்கு சுமார் ஏழு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்பட்டது. ஆனால் தேர்தலுக்குப் பிறகு பாஜகவுக்கு ஆதரவு கிடைக்கததால், ஜே.டி.எஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைத்தது. ஜே.டி.எஸ் தலைவர் எச்.டி. குமாரசுவாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார். இதனால் முதல்வர் பதவி ஏற்ற எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய சூழல் ஏற்ப்பட்டது.


கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் எச்டி தேவகவுடா மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது. மார்ச் 13-14 ஆம் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.


கடந்த வாரம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எச்டி தேவகவுடா இடையே நடைபெற்ற பேச்சுவாரத்தையில் முடிவுகள் எட்டவில்லை. மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் தனது கட்சிக்காக தேவகவுடா, குறைந்தபட்சம் 10 இடங்களைக் கொடுக்குமாறு காங்கிரஸிடம் கேட்டு உள்ளார். முதலில் 12 இடங்களை கேட்டதாகவும் கூறப்படுகிறது.


இந்தநிலையில் பா.ஜ.க மூத்த தலைவ எடியூரப்பா, வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகவில் மக்கள் 22 தொகுதிகளில் நமக்கு வெற்றி வாய்ப்புகளை வழங்கினால், அடுத்த 24 மணிநேரத்தில் கர்நாடகத்தில் நமது ஆட்சி அமைப்போம் எனக் கூறியுள்ளார்.