சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதல்; 22 பேர் பலி, குடியரசுத் தலைவர் கண்டனம்
காட்டுப்பகுதியில், மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில், மோதல் மூண்டது.
சத்தீஸ்கரின் நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகள் தண்டேவாடா, பிஜாப்பூர், சுக்மா உள்ளிட்ட மாவட்டங்கள் ஆகும். இதில் சுக்மா - பிஜாப்பூர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில், மோதல் மூண்டது.
பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனா். இந்த தாக்குதலில் 22 வீரர்கள் இறந்துட்டதாக பிஜாப்பூர் எஸ்.பி தெரிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்த 31 படை வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.
“சத்தீஸ்கரில் மாவோ தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் போது பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டது ஆழ்ந்த வேதனையைத் தருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த நாடு உங்களுக்கு உறுதுணையாக நிற்கும், இந்த தியாகத்தை இந்த நாடு ஒருபோதும் மறக்காது” என சத்தீஸ்கர் நக்ஸல் தாக்குதலை கண்டனம் செய்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ட்வீட் செய்துள்ளார்
ALSO READ | இந்தியாவை போலாவே ரஷ்யாவிலும் வாலாட்டிய டிவிட்டர்; கடிவாளம் போட்ட ரஷ்யா
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR