ஜூன் 1-ம் தேதி முதல் ஒரே நாடு! ஒரே வரி! விதிப்பு முறையான ஜிஎஸ்டி வரி நடைமுறை அமலுக்கு வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து ஒரே வரி விதிப்புக்கான நடைமுறைகளை மாநில அரசுகள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.


அதன் ஒரு பகுதியாக மாநில எல்லைகளில் உள்ள வணிக வரி சோதனை சாவடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிமுகமான முதலே தமிழ்நாடு - கேரளா, தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன.


இதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதுவரை நூற்றுக்கணக்கான சோதனை சாவடிகள் தங்களது தினசரி பணியை நிறுத்தி விட்டன.


கடந்த 3 நாட்களில் 22 மாநில அரசுகள் தங்கள் எல்லையில் உள்ள சோதனை சாவடிகளை மூடி விட்டன. 


அசாம், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் உள்பட 8 மாநிலங்களில் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இன்னும் சில தினங்களில் இந்த 8 மாநிலங்களிலும் முழுமையாக சோதனை சாவடிகளின் பணிகள் நிறுத்தப்பட்டு விடும் என்று மத்திய நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.