ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 22 பேர் ஜிகா வைரஸ் பாதிப்புடன் அறிகுறியுடன் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகம் முழுவதும் சுமார் 86 நாடுகளில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஜிகா வைரஸ் டெங்குவைப் போன்று காய்ச்சல், தோல் பாதிப்பு, தசை மற்றும் மூட்டுகளில் வலி, தலைவலி ஏற்படுதல் ஆகியவை பாதிப்பின் அறிகுறிகளாகும். இந்தியாவில் முதல் முதலில் கடந்த 2017-ம் ஆண்டில் அகமதாபாத்தில் ஜிகா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 


இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜிகா வைரஸ் பரவி வருகிறது. இங்கு 22 பேர் ஜிகா தாக்குதல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் பீகாரை சேர்ந்தவர். இதனால், பீகாரில் இருந்து ஜிகா வைரஸ் ராஜஸ்தானுக்கு பரவி இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தற்போது ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்குமாறு, சுகாதார அமைச்சகத்தை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது ஜிகா தாக்குதல் அறிகுறியுடன் காணப்படும் 22 பேரும் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.