நாடுமுழுவம் சுமார் 277 போலி கல்லூரிகள், பொறியியல் படிப்பினை வழங்கி வருவதாக இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்பட்டியிலில் தலைநகர் டெல்லி முதல் இடத்தினை பிடித்துள்ளது. 66 போலி பொறியியல் கல்லூரிகளை கொண்டுள்ள டெல்லி முதல் இடத்திலும், 35 போலி கல்லூரிகள் கொண்டுள்ள தெலுங்கானா இரண்டாவது இடத்திலும், 27 போலி பொறியியல் கல்லூரிகளை கொண்டுள்ள மேற்கு வங்கம் மூன்றாம் இடத்திலும் உள்ளது. 11 போலி பொறியியல் கல்லூரிகளை கொண்டுள்ள தமிழகம் இப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.


அதே வேலையில் அண்டை மாநிலமான கர்நாடகா 23 போலி கல்லூரிகளுடன் 4-வது இடத்தினை பிடித்துள்ளது. இதனையடுத்து 22 போலி கல்லூரிகளை கொண்டுள்ள உத்திர பிரதேஷ் 5-வது இடத்தில் உள்ளது.


இந்த தகவலினை இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடரில் அதிமுக மத்திய அமைச்சர் நாகராஜன் எழுப்பிய கேள்விக்கு மாநில மனிதவள அபிவிருத்தி அமைச்சர் சத்ய பால் சிங் பதில் அளிக்கையில் தெரிவித்துள்ளார். 


போலி கல்லூரிகளை கொண்டிருக்கும் மாநிலங்களின் பட்டியல்...


  • அந்தமான் நிகோபார் தீவுகள் -0

  • ஆந்திரப் பிரதேசம் -7

  • அருணாச்சல பிரதேசம் - 0

  • அசாம் - 0

  • பீகார் - 17

  • சண்டிகர் -7

  • சத்தீஸ்கர் -0

  • தாத்ரா மற்றும் நகர் ஹவேலி -0

  • டமன் மற்றும் தியூ -0

  • டெல்லி -66

  • கோவா -2

  • குஜராத் -8

  • ஹரியானா -18

  • ஹிமாச்சல பிரதேசம் -1

  • ஜம்மு மற்றும் காஷ்மீர்- 0

  • ஜார்கண்ட்- 4

  • கர்நாடகம் -23

  • கேரளம் -2

  • லக்ஷத்வீப்- 0

  • மத்தியப் பிரதேசம் -0

  • மகாராஷ்டிரா -16

  • மணிப்பூர்- 0

  • மேகாலயா- 0

  • மிசோரம் -0

  • நாகலேண்ட்- 0

  • ஒடிஷா -1

  • புதுச்சேரி-0

  • பஞ்சாப்- 5

  • ராஜஸ்தான் -3

  • சிக்கிம் -0

  • தமிழ்நாடு -11

  • தெலுங்கானா- 35

  • திரிபுரா- 0

  • உத்தரகண்ட் -3

  • உத்தரப் பிரதேசம் -22

  • மேற்கு வங்காளம்- 27


மொத்தம் 277